வாஷிங்டன்: விலை உயர்வை தடுக்க பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய சமீபத்தில் ஒன்றிய அரசு தடை விதித்தது. இதனால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள், முண்டியடித்துக் கொண்டு சூப்பர் மார்கெட்டில் அரிசியை வாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, அமெரிக்காவில் அரிசி விலை கடுமையாக உயர்ந்து விடும் என்ற அச்சம் காரணமாகவும், தங்களுக்கு அரசி கிடைக்காமல் போய் விடுமோ என்ற சந்தேகம் காரணமாகவும், இந்தியர்கள் அரிசி வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டில் வரிசையில் நிற்கின்றனர். சிலர் கடைக்குள் புகுந்து அங்கு அரிசி வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஏறி அரிசி மூட்டையை எடுத்துச்செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது.