திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 25 ‘அருளுடைமை’ (தொடர்பு கருதாமல் எல்லாரிடத்திலும் இரக்கம் காட்டுதல்)
குறள் 245:“அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லம்மா ஞாலம் கரி”
பொருள்: கற்று இயங்குகின்ற வளமுள்ள இப்பெரிய உலகத்தில், அருள் பூண்டவர்க்கு துன்பம் இல்லை என்பதற்கு இப்பெரிய உலகமே சான்று எனப்படுகிறது. அப்படியே திருமறையும் ரோமர் 8:19ல் “மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.” என்றும், யோவான் 3:8ல் “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.” என்றும்
திருக்குறளும்திருமறையும் அருளுடைமை எனும் இரக்க குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமிu திருக்குறள் உண்மை உரை பேரவை.