திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 29 ‘ கள்ளாமை (பிறர் பொருளை அவரை வஞ்சித்து மறைவாக கவர நினையாமை)
குறள் 285: “அறுள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்பு பார்ப்பார்கண் இல்”
பொருள்: அருளின் பெருமை கருதிப் பிறருடன் அன்புடையவராய் நடத்தல், பிறர்பொருளை கவர்ந்துகொள்ள எண்ணி பிறர் சோர்ந்திருக்கும் நிலையை பார்ப்பவரிடத்தில் இல்லை
எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் 1கொரிந்தியர் 13:4-5 இல் “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
என்றும், 2பேதுரு 2: 14இல் “விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.” என்றும் திருக்குறளும் திருமறையும் கள்ளாமை எனும் வஞ்சகத்தை கைவிட ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை