விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன ரூ.23 லட்சம் மதிப்பிலான 150 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன.
விருதுநகரில் செல்போன்கள் திருடுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலைங்களிலும் சைபர் கிரைம் பிரிவிலும் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
போலீஸார் வழக்குப் பதிந்து விருதுநகர் காவல் உட்கோட்டத்தில் 20, ராஜபாளையத்தில் 32, ஸ்ரீவில்லிபுத்தூரில் 20, சாத்தூரில் 20, சிவகாசியில் 20, அருப்புக்கோட்டையில் 16 மற்றும் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்ட காணாமல் போன ரூ.23 லட்சம் மதிப்பிலான செல்போன்களை சைபர்கிரைம் போலீஸார் மீட்டனர்.
