எவனோ திம்பானம் கறி
அதற்கு கிறித்தவன் கொடுப்பானாம் வரி …
கிறித்தவர்களுக்கு தனியாக ஒரு அரசியல் கட்சி தேவை என்பதை உணர்ந்து கிறித்தவ மக்களுக்காக உருவாக்க பட்ட கட்சி மக்கள் மேம்பாட்டு கழகம்.
40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இயக்கங்களில் பல்வேறு கட்சிகளிலும் கடுமையாக உழைத்து எல்லோரையும் வளர்த்து விடுவது கிறித்தவர்கள் ஆனால் எந்த கட்சியும் கிறித்தவர்களால் வளர்ந்த தலைவர்களும் கிறித்தவ மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
அதை சுட்டிக் காட்டி நம் பிரச்சினையை நாம் தான் தீர்க்க முடியும் என்று உருவாக்கப்பட்டு மக்கள் மேம்பாட்டு கழகம் வளர்ச்சியடைந்து வருகிறது.
கிறித்தவர்கள் தங்களின் பிள்ளைகளை அரசியல் அனாதைகளாக விட்டு விட கூடாது எனவே நாம் இருக்கும் போதே இதற்கு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று உழைத்து வருகிறோம்
இதை புரிந்து கொள்ளாத சில வடிகட்டிய முட்டாள்கள் தத்துவம் பேசிக்கொண்டு கண்டவன் காலில் விழுந்து கிடக்கிறார்கள் கேடு கெட்ட கிறித்தவனே நீ இருக்கிற கட்சியில ஒரு சீட்டு கேட்டு பாருடா அப்ப தெரியும் உன் லட்சணம்.
கிறித்தவர்கள் இந்த குறையை சரி செய்ய வேண்டும் இல்லை கிறித்தவர்கள் அரசியல் அதிகாரத்தில் நுழைய முடியாது.
தமிழக கிறித்தவ கல்வி நிறுவனங்கள் குருக்களும் கன்னியர்களும் நடத்தும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் விழாக்களுக்கு கிறித்தவ கட்சியையோ அல்லது அந்த பகுதியில் இருக்கும் கிறித்தவ இயக்கங்களின் தலைவர்களையோ பொது நிலையினர் களையோ அழைக்காமல் பொது விழாவை நடத்த கூடாது.
மீறி நடத்தினினால் அந்த இடத்தில் எழும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அந்த பள்ளியின் முதல்வரே அதாவது குருவானவரோ கன்னியரோ அவர்களே பொறுப்பேற்க வேண்டும் கிறித்தவ இறை மக்களை பயன்படுத்த கூடாது.
ஒரு இயக்கம் நடத்துவது கட்சி நடத்துவது கிறித்தவ மக்களுக்காக ஆனால் கிறித்தவ மக்களையும் தலைவர்களையும் ஒதுக்கி விட்டு நீங்கள் விழா நடத்தினால் அந்த பிரச்சனைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு கிறித்தவ மக்களை பயன்படுத்த கூடாது.
மத ரீதியாக கிறித்தவ நிறுவனங்கள் பாதிக்கப் படுகிற போது கிறித்தவ மக்கள் தேவை படுகிறார்கள் ஆனால் பணம் பதவி வருமானம் விழா போன்ற நேரங்களில் மற்றவர்கள் VIP யாக வருவார்கள் கிறித்தவ மக்களும் கிறித்தவ தலைவர்களும் புறக்கணிக்க படுவார்களா இது எந்த விதத்தில் நியாயம்.
கிறித்தவ நிறுவனங்களில் பதவியில் இருக்கும் இருபால் துறவறத்தார்கள் குருக்களும் கன்னியர்களும் இதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் நீங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் வரும் வருமானம் இறை மக்களுக்கு சொந்தமான து அதில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்பதை தெரிந்து மக்களுக்காக வாழுங்கள்.
எவனோ திம்பானாம் கறி
அதற்கு கிறித்தவன் கொடுப்பாராம் வரி !!!