சர்வதேச தூய்மையான காற்று தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட கலைமகள் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தலைமையில் இன்று நடைபெற்ற காற்று மாசினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாமில் மாணவ, மாணவியர் அனைவரும் காற்று மாசு தவிர்த்தல் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன், சுகாதாரக் கல்வி அலுவலர் டி. ஜி. சீனிவாசன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், பள்ளிக் காப்பாளர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு