சென்னை:
தமிழகத்தில் சுமார் 55 சுங்க சாவடிகள் இருக்கும் நிலையில் 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில், தமிழகத்தில் 55 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. அதில் இரண்டு பங்காக பிரித்து ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 29 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இது குறித்த அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.
இந்த சுங்கசாவடிகளில் கர்நாடகா, கோவை, ஆந்திரா மற்றும் மதுரைக்கு சென்று திரும்பும் வாகனங்கள் கூடுதலாக ரூ. 55 செலுத்த வேண்டும். இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணம் மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு