சுகாதார ஆராய்ச்சித் துறை தூய்மையே சேவை இயக்கம், 2024-ஐ ஏற்பாடு செய்துள்ளது. இது 2024, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, வரை கொண்டாடப்படும். இந்த இயக்கத்தில், துறை மற்றும் அதன் தன்னாட்சி அமைப்பான ஐ.சி.எம்.ஆர் மற்றும் நாடு முழுவதும் உள்ள அதன் 27 நிறுவனங்களுடன் இணைந்து பதினைந்து நாட்களில் ஒவ்வொரு குடிமகனும், சமூகமும் அமைப்பும் பரவலான ஈடுபாட்டையும் பங்கேற்பையும் உறுதி செய்யும். இந்த இயக்கத்தின் மூன்று முக்கிய தூண்கள்-
தூய்மையின் மக்கள் பங்களிப்பு – பொதுமக்கள் பங்கேற்பு, விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்குதல்: பல்வேறு பங்கேற்பு நடவடிக்கைகள் மூலம் தூய்மை முயற்சிகளில் குடிமக்களை ஈடுபடுத்துதல்.
தூய்மை பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பு சுகாதார பரிசோதனைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு வழங்குதல்.
சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் 27 ஐசிஎம்ஆர் நிறுவனங்களின் 1200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 2024 செப்டம்பர் 17 அன்று சுகாதார ஆராய்ச்சித் துறைச் செயலாளர், மற்றும் ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் ஆகியோரால் ‘தூய்மை உறுதிமொழி’ வழங்கப்பட்டது. இக்கால கட்டத்தில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டத்தின் கீழ் மரம் நடும் இயக்கம்
· ஐசிஎம்ஆர் நிறுவனங்களில் தூய்மை இயக்கம் குறித்த பயிற்சிப் பயிலரங்குகள்
· தூய்மை பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பு உடல் பரிசோதனை
· தூய்மை குறித்த விழிப்புணர்வு நடைபயணம்
ஐ.சி.எம்.ஆர் மூலம் தூய்மை விழிப்புணர்வுக்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் விரிவுரைகள்
தூய்மை இந்தியா தின கொண்டாட்டத்துடன் இயக்கம் நிறைவடையும், அதைத் தொடர்ந்து 02.10.2024 அன்று தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும்.