இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. நேற்று நடந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்திருக்கிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ட்ரோன் எதிர்ப்பு அமைப்பையும் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. இம்மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர், அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். பின்னர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை சுட்டு கொலை செய்திருக்கிறார். இதனையடுத்து இரண்டாவது சம்பவம் மாவட்ட தலைநகரில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் நடந்திருக்கிறது
இந்த சம்பவத்தில், இரண்டு ஆயுதம் ஏந்திய குழுக்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதேபோல மறுபுறம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் சிலர் தாக்குதலுக்கு ராக்கெட் லாஞ்சரை பயன்படுத்தியுள்ளனர். இங்குள்ள கிராமங்கள் மீது அதிகாலை 4.30 மணியளவில் ராக்கெட் லாஞ்சர்கள் வீசப்பட்டிருக்கின்றன. இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என போலீஸ் சந்தேகத்திருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், இம்பாலில், ட்ரோன்களை பயன்படுத்தி குண்டுகள் வீசப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்த தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது மணிப்பூர் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர் மோதல் சம்பவங்களை தடுக்க காவல்துறை சில தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து பேசிய அம்மாநில காவல்துறை ஐஜி கே கபீப், “பொதுமக்கள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள, கூடுதல் ஆயுதங்களை வாங்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். ட்ரோன் தாக்குதல்களை தடுக்க நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ராணுவ ஹெலிகாப்டர்கள் வான்வழி ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.