ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. இதில், ஊட்டி படகு இல்லத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள வசதியானது, மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மலைகளின் அரசி எனப்படும் அழைக்கப்படும் சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு, வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வாடிக்கையாகும்.. முக்கியமாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் நீலகிரியில் அலைமோதும்
பண்டிகை காலம்: அந்த வகையில், தற்போது பண்டிகை காலம் துவங்கிவிட்டதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.. கோடை சீசன் இல்லாவிட்டாலும்கூட, வார வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்தவண்ணம் உள்ளன. எனவே, வார விடுமுறை தினங்களில் கூட்டம் இனியும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இப்படி ஊட்டிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள், படகு இல்லத்திலிருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய தவறுவதில்லை.. ஏரி கரையோரம் மரங்களில் அமர்ந்திருந்து ஓய்வு எடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் பயணிகள் கண்டு உற்சாகமடைந்துவிடுகிறார்கள். தேனிலவு: அதேபோல, ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்தில் இருந்தும் படகு சவாரி செய்கிறார்கள்.. பொதுமக்கள் படகு சவாரி செய்ய வசதியாக மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள், மிதி படகுகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி உற்சாகமாக படகு சவாரி செய்து வருகிறார்கள்..