திருவனந்தபுரம்:
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க கேரள மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் ஜாதி பெயர் குறித்து தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியாகி உள்ளது. காலியாக உள்ள தொகுதிகளுக்கு, 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற சூழ்நிலை உள்ளது.
மேலும் பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மறைவு, லட்சத்தீவு தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசலுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை ஆகிய விவகாரத்தால் இந்த இரு தொகுதிகளும் காலியாக உள்ளது. எனவே 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க கேரள மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தகுதி நீக்கத்திற்கு எதிராக ராகுல் தொடுக்கும் சட்ட போராட்டத்தில், அவருக்கு பின்னடைவு ஏற்பட்டு, தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்பட்டால், வயநாடு தொகுதியில் பிரியங்காவை களமிறக்க, கேரள மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு