பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தின் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் வாழைத்தார் மொத்த விற்பனையின்போது, பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம் கிணத்துக்கடவு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து கரூர், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் பெய்த மழையால், பல இடங்களில் வாழைகள் செழித்தன. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் வாழைத்தார் அறுவடை அதிகமாக இருந்தது. இதன் காரணமாக அந்நேரத்தில் அனைத்து ரக வாழைத்தார்கள் விலையும் குறைவானது.
ஆனால் கடந்த சில வாரமாக மலையில்லமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பல இடங்களில்
வாழைகள் அறுவடை பாதிக்கப்பட்டது. இதில் நேற்று நடந்த சந்தை நாளின்போது சுற்று வட்டார பகுதியில் சில கிராமங்களில் இருந்தே வாழைத்தார் வரத்து இருந்ததது. வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் வரத்து இல்லாததால் மார்க்கெட்டில் விற்பனைக்காக குறைந்த வாழைத்தார்களே இருந்தன.
தற்போது விசேஷ நாட்கள் குறைவாக இருந்தாலும் வரத்து குறைவால் கூடுதல் விலைக்கு விற்றது. இதில் செவ்வாழைத்தார் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், பூவாழை ரூ.42க்கும், நேந்திரம் ரூ.42க்கும் கேரளா ரஸ்தாலி ரூ.50க்கும், மோரிஸ் ரூ.40க்கும் என கடந்த மாதத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.