2024-25 நிதியாண்டில் வருமான வரித்துறை இதுவரை 16 பேருக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளது.சமீபத்தில், வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 276CC-ன் கீழ் வேண்டுமென்றே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத குற்றத்திற்காக தனி நபர் ஒருவருக்கு தண்டனை உத்தரவு பெறப்பட்டது.2014-15 மதிப்பீட்டு ஆண்டுடன் தொடர்புடைய 2013-14 நிதியாண்டில் வரிசெலுத்தும் ஒருவர் ரூ.1,13,40,173/- கமிஷன் வருமானத்தைப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2017-ம் ஆண்டு சென்னை பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம்-2ல் மேற்கண்ட வரி செலுத்துபவர் மீது வழக்கு தொடரப்பட்டது.கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர், இ.ஓ.-2 நீதிமன்றம், வரி செலுத்துபவர் செய்த குற்றத்தை அறிந்த பின்னர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. திரு எல் முரளிகிருஷ்ணன், சிறப்பு அரசு வழக்குரைஞர், மேற்கண்ட வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு நடவடிக்கைகளில் துறையின் சார்பாக வாதாடினார். விசாரணையின் முடிவில், முதன்மைப் பெருநகர குற்றவியல் நடுவர், பொருளாதாரக் குற்றங்கள்-2, சென்னை, வருமான வரிச் சட்டம், 1961 பிரிவு 276CC-ன் கீழ் செய்த குற்றத்திற்கு மதிப்பீட்டாளர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.ஏ.சி.ஜே.எம் 05.12.2024 தேதியிட்ட உத்தரவின் மூலம் மதிப்பீட்டாளருக்கு ஒரு (1) வருட கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு