இந்த அக்கிரஹார தெருவில் தான் கொங்கு நாட்டு சிங்கம் தளபதி ஆர்.வீரய்யன் 1924ல் பொதுவழி நுழைவு போராட்டம் நடத்தினார். இது சேலம் அருகே இருக்கும் கமலாப்புரம் கிராமம். எம்.எல்.சி யான ஆர்.வீரய்யன் நடத்திய களப் போராட்டமும் சட்ட போராட்டமும் தலித்துகளுக்கு பொதுவழி உரிமையை நிலைநாட்டவும் தீண்டாமையை குற்றமாக்கவும் சட்டம் மெட்ராஸ் மாகாணத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக இயற்றப்பட்டது.
கமலாப்புரம் போராட்டத்தில் ஆர்.வீரய்யன் ஈடுப்பட்டபோது பம்பாய் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி.
அவர் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய போராட்டத்துடன் ஒப்பிடும்போது வைக்கம் போராட்டம் ஒன்றுமேயில்லை. மெட்ராஸ் மாகாணத்தில் எங்கும் பொது தெருவில் தலித்துகள் நுழைவதற்கு தடை இருந்த சூழ்நிலையில் அதே காலக்கட்டத்தில் அதனை கண்டுக்கொள்ளாமல் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் கோயிலுக்கு போகும் தெரு நுழையும் போராட்டம் நடந்ததை கொண்டாடும் சமூகத்தினை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. வைக்கம் போராட்டத்திற்கு பத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள், இரண்டு மாநில நூற்றாண்டு கொண்டாட்டம். வைக்கம் போராட்டத்தைவிட பன்மடங்கு பயனுள்ள போராட்டம் கமலாப்புரம் போராட்டம்.