கோட்ட அளவிலான தபால் சேவைகள் குறைதீர்க்கும் முகாம் சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில் 16.09.2023 அன்று காலை 1100 மணியளவில் நடைபெற உள்ளது. குறைகள் குறித்த விவரங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் 13.09.2023.
தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். புகார் சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
குறைகளை அனுப்ப வேண்டிய முகவரி
“அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம்”
நா.பிரகாஷ், முதன்மை அஞ்சல் அதிகாரி,
அண்ணா சாலை தலைமை தபால் நிலையம்,
சென்னை 600 002.
தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் “அஞ்சல் சேவைகள் குறைதீர்க்கும் முகாம்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்