ராமேசுவரம்: தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் கல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 மைல் கல் தொலைவிலும் இந்த தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆலய திருவிழா பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 4-ந்தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி மாலை 4.30 மணிக்கு அந்தோணியாரின் உருவம் பதித்த கொடி ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து 14 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி மற்றும் திருவிழா திருப்பலி, நற்கருணை ஆசீர், இரவு தேர்பவனி ஆகியவை நடக்கிறது. 4-ந்தேதி காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. இதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரத்தில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 19 நாட்டுப் படகுகளில் 1,960 ஆண்களும், 379 பெண்களும், 38 ஆண் குழந்தைகளும், 31 பெண் குழந்தைகளும் கச்சத்தீவு செல்கின்றனர். மொத்தம் 2 ஆயிரத்து 408 பேர் பதிவு செய்துள்ளனர். கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் அனைத்தும் நாளை மறுநாள் (3-ந்தேதி) காலை 8 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்படுகின்றன. திருவிழாவுக்கு செல்ல ஏற்கனவே பதிவு செய்தவர்களின் ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி வைக்கிறார்கள். கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் விசைப்படகுகளை இன்று சுங்கத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படகுகள் பழுதின்றி உள்ளதா? சட்டவிரோத பொருட்கள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்தினர். அதிகாரிகளின் இந்த ஆய்வு மற்றும் சோதனை நாளையும் தொடர்ந்து நடக்கிறது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று (1-ந்தேதி) முதல் வருகிற 4-ந்தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம் பகுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதேபோல் வருகிற 3, 4-ந்தேதிகளில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு