சென்னை:
அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்ட மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைத்து வரக்கூடிய மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
அதேபோல் தொழிற்பேட்டையில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில்முனைவோர்களில் 5 ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டாக்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
15 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், தொழிற்பேட்டையை பொறுத்தவரை மனை ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டாக்களையும் முதல்வர் வழங்கினார். பொதுவாக அரசு சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் மற்றும் திட்டபடிகள் ஆகியவற்றை காணொலி காட்சி மூலமாக பிற மாவட்டங்களில் நடக்கக்கூடிய பணிகளை துறை ரீதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.
சிட்கோ தொழிற்பேட்டைகளில் கட்டப்பட்டுள்ள பொது வசதி மையக் கட்டடங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு