சென்னை, :
சென்னை நீலாங்கரை வைத்திலிங்கம் சாலையை சேர்ந்த செல்வம் – சந்திய பிரியா தம்பதியரின் மகன் ஓம் லிஷான் (வயது9). ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். சிறிய வயதிலேயே இந்த மாணவரிடம் அபரிமிதமான திறமை உள்ளது. இந்த மாணவரின் திறமையை வெளிக் கொண்டுவரும் வகையில் பள்ளி ஆசிரியர் வழிகாட்டுதலின்படி இந்தியாவின் உலக சாதனை என்கிற அமைப்பிடம் மாணவனின் திறமைகள் வீடியோ காண்பரன்ஸ் மூலமாக வெளிக் கொண்டுவரப்பட்டது.
அதாவது, மகாபாரத கதை, ராமாயணம், வாசுகிபாம்பு, காவிரி ஆறு உருவானகதை, மகாகாளி கதை, கிருஷ்ணர் பிறந்த கதை, திருப்பதி ஏழுமலையான் கதை, அம்ரித் மந்தன் கதை, ஹனுமான் பிறந்த கதை, ஜெகந்நாத்பூரி கோவில் மற்றும் கிருஷ்ணர் வரலாறு, இலங்கை, சஞ்சீவினி மலை, தாஜ்மஹால் வரலாறு, டைனசரஸ், ஓசோன் படலம் உள்பட பல வரலாற்று நிகழ்வுகள் பற்றி தெள்ளத்தெளிவாக அரை மணி நேரத்தில் கூறி மாணவர் இந்தியாவின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதற்கான சான்றிதழ், பதக்கம் ஆகியவை மாணவருக்கு வழங்கப்பட்டது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு