மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று திருச்சி மாவட்டம், சமயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது அங்குள்ள செவிலியர்களிடம் அம்மருத்துவமனையில் உள்ள வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விசாரித்தபோது, ஒரு சிறுவன் நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்துள்ளான். அவருக்கு உடனடியாக சமயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ARV என்று சொல்லக்கூடிய நாய்க்கடிக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்தார்கள். இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, 07.05.2021 இந்த ஆட்சி பொறுப்பேற்றபிறகுதான் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் ASV. ARV என்று சொல்லக்கூடிய பாம்புக்கடி மற்றும் நாய்க்கடிகளுக்கான தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்படுகிறது. கடந்த கால ஆட்சிக்காலத்தில் பாம்புக்கடி, நாய்க்கடி போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்றுதான் சிகிச்சைகள் வழங்க முடியும். இந்தநிலை தற்போது மாறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் வழங்க ஏதுவாக இந்த ஆட்சி மருத்துவத்துறையை கட்டமைத்துள்ளதற்காக பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் பெற்றோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார்கள். தலைமை

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு