இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 09ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் வலைபயிற்சியை தொடங்கியுள்ளனர்.
நியூசிலாந்து தொடரை அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடவுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளும் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 09ம் தேதி நாக்பூரில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது என்பதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், இந்திய அணி 2வது இடத்திலும் உள்ளது. இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவிடம் வெற்றி பெற்றே தீர வேண்டும். இதற்காக இந்திய அணி நாக்பூரிலும், ஆஸ்திரேலிய அணி பெங்களூருவிலும் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.