திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 26 ‘புலால் மறுத்தல்’ (இறைச்சி உண்பதைத் தவிர்த்தல்)
குறள் 253: “படைகொண்டார் நெஞ்சம்பொல் நன்றூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்”
பொருள்:பிரிதொறு உடலை சுவையாக உண்டவர் உள்ளம் அந்த ஊனின் சுவையை அல்லாமல் அருளை எண்ணிப் பார்க்காது, எவ்வாறு ? என்றால் கொலைக்கருவியை கையில் கொண்டவனது உள்ளம் அக்கொலைக் கருவியால் செய்யப்படும் கொலையை அல்லாமல் அருளை நோக்காதது போல் ஆகும் எனப்படுகிறது. அப்படியே திருமறையும் 1 சாமுவேல் 17: 57ல் “தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது.” என்றும், ஆதியாகமம் 18: 7ல்”ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்திலே சமைத்தான்.” என்றும், ரோமர் 8:19ல் “மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.” என்றும் திருக்குறளும் திருமறையும் புலால் மறுத்தல் எனும் நற் குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை