திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 26 ‘புலால் மறுத்தல்’ (இறைச்சி உண்பதைத் தவிர்த்தல்)
குறள் 254: “அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்”
பொருள்:அருள் என்பது எதுவென்றால் கொல்லாமை ஆகும். அருள் அல்லது எது வென்றால் கொல்லுதல் ஆகும். ஆகையால் , கொல்லுதலால் வரும் ஊனைத் தின்பது பாவச் செயலாகும் எனப்படுகிறது. அப்படியே திருமறையும் யாத்திராகமம் 20:13 ல் “கொலை செய்யாதிருப்பாயாக.” என்றும், லூக்கா 26:52 “அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.” என்றும், யாத்திராகமாம் 1:17ல் “மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார் கள்” என்றும், மாற்கு 16: 15ல் “பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். .” என்றும்திருக்குறளும் திருமறையும் புலால் மறுத்தல் எனும் நற் குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை