திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 26 ‘புலால் மறுத்தல்’ (இறைச்சி உண்பதைத் தவிர்த்தல்)
குறள் 257: “உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்”
பொருள்:புலால் என்பது இன்னொரு உடம்பின் புண்ணேயாகும். இவ்வுண்மையை உணரப்பெற்றா ல் அதை உண்ணாதிருத்தல் வேண்டும். புண்ணை யாரும் உண்ண மாட்டார்கள் அல்லவா?எனப்படுகிறது. அப்படியே திருமறையும் லேவியர் 17:15ல் “சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.” என்றும், 1 கொரிந்தியர் 8: 13ல்”ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்” என்றும், மத்தேயு 5: 7ல்”இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.” என்றும்
திருக்குறளும் திருமறையும் புலால் மறுத்தல் எனும் நற் குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை