திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 26 ‘புலால் மறுத்தல்’ (இறைச்சி உண்பதைத் தவிர்த்தல்)
குறள் 258: “செயிரின் தலைபிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலை பிரிந்த ஊன்”
பொருள்: குற்றத்திலிருந்து நீங்கிய உண்மையை அறிந்த அறிவினையுடயவர், உயிரின் நீங்கிய உடம்பை உண்ணமாட்டார் எனப்படுகிறது. அப்படியே திருமறையும் எபிரேயர் 9: 12ல் “வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.” என்றும், ரோமர் 6: 11ல்”அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.” என்றும், எபிரேயர் 10: 29ல்”தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.” என்றும்
திருக்குறளும் திருமறையும் புலால் மறுத்தல் எனும் நற் குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை