திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 27 ‘தவம்’ (உடலை வாட்டும் துறவறப் பயிற்சி)
குறள் 262 “தவமும் தவமுடயார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது”
பொருள்: தவஒழுக்கம் உடையவர்க்குத் தவக்கோலம் பொருந்துவதாகும், தவ ஒழுக்கம் இல்லாதவர் தவம் பூணுவது பழியாகும் எனப்படுகிறது. அப்படியே திருமறையும் யாக்கோபு 1:8ல் “இருமனமுள்ளவன் தன் வழிகளிகலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.” என்றும், 1 கொரிந்தியர் 7:26-27ல் “அதென்னவெனில் இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன். நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால் மனைவியைத் தேடாதே.” என்றும் திருக்குறளும் திருமறையும் தவம் எனும் நற்பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை