திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 27 ‘தவம்’ (உடலை வாட்டும் துறவறப் பயிற்சி)
குறள் 263: “துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்
கொல்மற்றை யவர்கள் தவம்”
பொருள்:துறவியர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவுவதற்காக வே இல்லறத்தினர் தவம் செய்தலை மறந்தனர் போலும்?எனப்படுகிறது. அப்படியே திருமறையும் 2இராஜாக்கள் 4:8ல் “பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.”என்றும், அப்போஸ்தலர் 16: 15ல்”அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்களென்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.” என்றும்திருக்குறளும் திருமறையும் தவம் எனும் நற்பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை