திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 27 ‘தவம்’ (உடலை வாட்டும் துறவறப் பயிற்சி)
குறள் 265: “வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்”
பொருள்: விரும்பிய பேறுகளை விரும்பியவாறே பெற முடியும். ஆகையால் செய்யத்தக்க தவம் இல்லற வாழ்க்கையிலும் முயன்று செய்யப்படும்” எனப்படுகிறது. அப்படியே திருமறையும் மத்தேயு 17:2ல் “இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.” என்றும், பிலிப்பியர் 4:6ல்
“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” என்றும்திருக்குறளும் திருமறையும் தவம் எனும் நற்பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை