திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 28 ‘கூடா ஒழக்கம்’ (துறவரத்திற்கு ஒவ்வாத தீய ஒழுக்கம் அதாவது மறைவாக சிற்றின்பம் நுகர்தல்)
குறள் 277: “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து”
பொருள்:வெளிக்கோலத்தில் குன்றிமணியின் பின்புறம் போலச் செம்மையானவராகக் காணப்பட்டவராயினும் உள்ளத்தில் குன்றிமனியின் மூக்குப் போல இருண்டிருப்பவரை உடையது இவ்வுலகம்
எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் எரேமியா 17:9ல் “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” என்றும், மத்தேயு 23: 27ல் “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.” என்றும்,
திருக்குறளும் திருமறையும் துறவறத்திற்கு ஒவ்வாத கூடா ஒழக்கத்தை கைவிட ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை