திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 28 ‘கூடா ஒழக்கம்’ (துறவரத்திற்கு ஒவ்வாத தீய ஒழுக்கம் அதாவது மறைவாக சிற்றின்பம் நுகர்தல்)
குறள் 278: “மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்”
பொருள்:உள்ளத்தில் குற்றத்தை வைத்துக் கொண்டு வெளியே குற்றம் இல்லாதவர் போல், தண்ணீரில் மூழ்கி அதாவது திருமுழுக்கு பெறும் திருச்சபையில் கள்ளத்தனமாக வாழும் மனிதர் உலகில் பலர் உள்ளனர்
எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் அப்போஸ்தலர் 1: 4ல் “அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.” என்றும், அப்போஸ்தலர் 2: 38ல் “பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” என்றும், அப்போஸ்தலர் 19: 2ல் “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.” என்றும்
திருக்குறளும் திருமறையும் துறவறத்திற்கு ஒவ்வாத கூடா ஒழக்கத்தை கைவிட ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை.