திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 29 ‘ கள்ளாமை (பிறர் பொருளை அவரை வஞ்சித்து மறைவாக கவர நினையாமை)
குறள் 281: “எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு”
பொருள்:கள்வன் என்று பிறரால் இகழப்படாமையை விரும்புகின்றவன் என்று சொல்லப்படுபவன் எந்தப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்து கவர நினைக்காமல் காத்துக்கொள்ளல் வேன்டும்
எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் நீதிமொழிகள் 13: 11ல் “வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.”என்றும், நீதிமொழிகள் 23: 5ல் ” இல்லாமற்போகும் பொருள்மேல் உன்கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத்தனக்குஉண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.” என்றும் திருக்குறளும் திருமறையும் கள்ளாமை எனும் வஞ்சகத்தை கைவிட ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை.