திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 29 ‘ கள்ளாமை (பிறர் பொருளை அவரை வஞ்சித்து மறைவாக கவர நினையாமை)
குறள் 284: “களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வியா விழுமம் தரும்”
பொருள்:பிறர்பொருளை கவர்வதில் ஒருவருக்குள்ள மிகுந்த விருப்பம், அப்போதைக்கு நலம் செய்வது போலத் தோன்றி, பின்பு அதன் பயன் விளையும் காலத்தில் தீராத துன்பத்தை உண்டாக்கும்
எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் நீதிமொழிகள் 6:25-26ல் “உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.’ என்றும் திருக்குறளும் திருமறையும் கள்ளாமை எனும் வஞ்சகத்தை கைவிட ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை