திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 25 ‘அருளுடைமை’ (தொடர்பு கருதாமல் எல்லாரிடத்திலும் இரக்கம் காட்டுதல்)
குறள் 248:“பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது”
பொருள்: பொருளில்லாதவர், முயற்சியால் மீண்டும் ஒருக்கால் அதைப் பெற்று பொலிவடைவர். ஆனால், அருளில்லாதவர் ஒருமித்த நிலையில் அழிந்தவர் ஆவர். பின்பு ஒருக்காலும் ஆக்கம் பெறமாட்டார் எனப்படுகிறது. அப்படியே திருமறையும் மத்தேயு 18: 33ல் “நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,.” என்றும், யோவான் 8: 11ல்”அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.” என்றும், எபிரேயர் 10: 28ல்”தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.” எனவும் தூய ஆவி வழியாக அருளப்பட்டு (confirmation) திருமறையில் கிருபை-மன்னிப்பு,இரட்சிப்பு, விடுதலை(தகுதி இல்லாதிருந்த மனுமக்கள் மேல் இறைவன் அருளும் இரக்கம்) என அறியப்படுவதன் வழி திருக்குறளும் திருமறையும் அருளுடைமை எனும் இரக்க குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமிu திருக்குறள் உண்மை உரை பேரவை.