திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 25 ‘அருளுடைமை’ (தொடர்பு கருதாமல் எல்லாரிடத்திலும் இரக்கம் காட்டுதல்)
குறள் 250: “வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து”
பொருள்:ஒருவன், அருளில்லாமையால் தன்னைவிட எளியவரைத் துன்புறுத்த செல்லும்பொழுது, தன்னைவிட வலியவர் தன்னைத் துன்புறுத்த வரும்போது தான் அவர் முன் அஞ்சி நிற்கும் நிலையை நினைக்க வேண்டும். எனப்படுகிறது. அப்படியே திருமறையும் கலாத்தியர் 6: 7ல்”மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” என்றும், லூக்கா 14: 31ல்”அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?” என்றும், எபேசியர் 6:9ல்”எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதமில்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.” என்றும்
திருக்குறளும் திருமறையும் அருளுடைமை(தேவன்பு)எனும் இரக்க குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமிu திருக்குறள் உண்மை உரை பேரவை