திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 26 ‘புலால் மறுத்தல்’ (இறைச்சி உண்பதைத் தவிர்த்தல்)
குறள் 251: “தன்னூன் பெருக்கற்க்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அறம்”
பொருள்: தன் உடம்பைப் பாதுகாத்துப் பெருக்குவதற்காகத் தான் வேறொரு உயிரின் உடம்பைத் தின்பவன் அறுளாளனாக எங்ஙனம் இருக்க இயலும் எனப்படுகிறது. அப்படியே திருமறையும் மாற்கு 16: 15ல் “பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” என்றும், லூக்கா 22: 23ல்”பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.” என்றும்
திருக்குறளும் திருமறையும் புலால் மறுத்தல் எனும் நற் குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம். இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமிu திருக்குறள் உண்மை உரை பேரவை.