புதுடில்லி: எம்பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை ஒருவருக்கு கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.
2022 ம் ஆண்டு முதன் முதலாக ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆப்ரிக்க நாடுகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 517 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று குரங்கு அம்மை தொற்று அறிகுறியுள்ள நபருக்கு இன்று நடந்த பரிசோதனையில் உறுதியாகியுள்ளாதாகவும், அவருக்கு கிளேட் 2 வகை தொற்று பாதிப்பு எனவும், இது உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள தொற்று பாதிப்பு இல்லை எனவும் தொற்று உறுதியாகியுள்ள நபர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.