என்னதான் ஆங்கில மருத்துவம் இருந்தாலும் நம் முன்னோர் நமக்கு வகுத்து தந்துள்ள கைவைத்தியம், நாட்டு மருந்து வைத்தியம் பல நேரங்களில் நமக்கு பல நோய்களை தீர்த்து வைக்க பேருதவி புரிகிறது. தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறகு இன்புளூயன்சா தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதற்கான கை வைத்தியத்தை பார்ப்போமா…
தமிழகம் உள்பட இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்புளூயன்சா என்னும் வைரஸ் காச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக சளி, தொடர் இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை ஏற்படுகிறது.
காய்ச்சல், சளி, இருமல், தும்மல், உடல்வலி உள்ளவர்கள் 10 சிறிய வேப்பிலை குச்சிகளை சிறுசிறு துண்டுகளாக்கி 200 மி.லி தண்ணீரில் போட்டு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து காய்ச்ச வேண்டும். அதனை அரை டம்ளர் அளவுக்கு எடுத்து வடிகட்டி வெதவெதப்புடன் பருக வேண்டும். இவ்வாறு செய்தால் சளி, இருமல், காய்ச்சல் நீங்கும்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு