தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்டி, பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, லஸ் சர்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு (Traffic Island) புதிதாக பெயர் சூட்டப்பட்ட ”இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” பெயர்ப்பலகையினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று (26.12.2024) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, மதிப்பிற்குரிய துணை மேயர் மு. மகேஷ்குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், மண்டலக் குழுத் தலைவர் எஸ். மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் மோ. சரஸ்வதி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் மகள் புஷ்பா கந்தசாமி மற்றும் குடும்பத்தினர், ரசிகர்கள் சங்க நிர்வாகிகள் வி.பாபு, முகமது இலியாஸ், நடிகர் கலைமாமணி பூவிலங்கு மோகன், திரையுலகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு