ஆதம்பாக்கம்:
சென்னை ஆதம்பாக்கம் டி.என்.ஜி.ஓ. காலனி முதல் தெருவை சேர்ந்த ராகுல் மேஸ்திரியின் மூத்த மகன் ரா.செல்வராஜ். இவர் வேளச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நங்கநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. இதில் முதல் மனைவி இரா.ரேவதி, இரண்டாவது மனைவி நீலாவதி ஆவர். இரு மனைவிகளால் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இரு பிரிவினரும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே யார் வீட்டிற்கு பிரேதத்தை அனுப்புவது என்று குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து மடிப்பாக்கம் காவல் துணை ஆணையர், ஆலோசித்தபோது, உதவி ஆய்வாளர் சுமார் முப்பது ஆண்டுகள் இவரது இரண்டாவது மனைவி வீட்டில் வசித்து வந்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இரண்டாவது மனைவியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவியின் உறவினர்கள் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கூடி உள்ளனர்.
மேலும் மடிப்பாக்கம் காவல் துணை ஆனையாளர் ரூபன் , இரு தரப்பினரையும் அழைத்து பேசாமல், இரண்டாவது மனைவி வீட்டாரிடம் மட்டுமே பேசி ஒருதலை பட்சமான முடிவு எடுத்துள்ளதாகவும் முதல் மனைவி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் காவல்துறை நேரிடையாக தலையிட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முன்வந்துள்ளனர் .
இதன்பிறகு காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முதல் மனைவியின் மகன் அருண் ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடலை முதல் மனைவியின் மகன் அருண் ராஜ் அவர்களிடமே முதல் தகவல் அறிக்கையின்படி உடல் ஒப்படைக்கப்பட்டு இதன் பிறகு இரண்டாவது மனைவி நீலாவதியின் கோரிக்கையை ஏற்று இரண்டாவது மனைவி வீட்டில் இருந்து நல்லடக்கம் செய்ய இரு பிரிவினரும் ஓப்புகொண்டனர்