ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தை அடைவதற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டது சந்திரயான் 3 விண்கலம். ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயானின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவின் மேற்பரப்பை தொட்டது. இதன் அடிப்படையில் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்தது.
சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டிருக்கும் விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்துருவப் பகுதியின் மேற்பரப்பில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தன.
அந்த வகையில் இஸ்ரோவில் ராக்கெட் ஏவப்படும் போது வர்ணனை செய்யும் பெண் குரலுக்கும் தனி ரசிகர்கள் உண்டு. அந்த குரலுக்கு சொந்தக்காரர் விஞ்ஞானி வளர்மதி. கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய உந்துகணை நிகழ்வுகளின் போது வளர்மதி வர்ணனையாளராக பணியாற்றியுள்ளார். 50 வயதாகிய வளர்மதியின் குரலுக்கு பிரபல விஞ்ஞானிகளும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். இந்த குரலுக்கு சொந்தக்காரரான விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (04.09.2023) உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு விஞ்ஞானிகள்,
பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.