ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
“ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் ஈஸ்டர் பண்டிகை, அன்பு, இரக்கம் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் ஆழமான தாக்கத்தை்தை நினைவூட்டுகிறது.
இந்தப் புனிதமான சந்தர்ப்பம், நம் வாழ்வில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். அதே நேரத்தில் மனிதகுலத்திற்கு சேவை செய்ய நம்மை ஊக்குவிக்கட்டும்.”
இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.