ஊழல் செய்ய சட்டம் போட்டது பாஜக ஆட்சி : கனிமொழி தேர்தல் பிரச்சாரம்

ஊழல் செய்வதற்கு சட்டம் போட்ட ஆட்சி பாஜக ஆட்சி என்றும், திமுகவை ஒழிப்பேன் எனக் கூறும் பிரதமர், தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போகப் போகிறார் என நெல்லையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக எம்.பி.  கனிமொழி  காட்டமாக பேசினார்.

மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.  நெல்லை வாகையடி முனையில்  கூட்டணி கட்சியான காங்கிரஸ்கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து  இரண்டாவது நாளாக நெல்லை டவுன் வாகையடி முனையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

வரக்கூடிய தேர்தல் எல்லா தேர்தலை போன்றதல்ல. இந்த தேர்தல் நமது உரிமையை பாதுகாக்ககூடிய தேர்தல். ஆங்கிலேய காலகட்டத்தில் நமது உரிமைகள் உடமைகள் பரித்து எடுத்து சென்றதை போல் தமிழக வளங்கள் வரி ஜிஎஸ்.டி என்ற பெயரில் மத்திய அரசால் பிடுங்கப்பட்டு வருகிறது. நமது சுயமரியாதை மாண்பு உள்ளிட்டவைகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது. ஒற்றுமையான சமூகங்களை அரசியல் காரணங்களுக்காக பாஜக பிரித்து ஆளும் சூழ்ச்சியை செய்துவருகிறது. பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூரில் 2 குழுக்களுக்குள் பிரிவினையை தூண்டி பிரித்து செயல்படுத்தி கொண்டிருக்கிது. உலகம் முழுதும் சுற்றி வரும் நாட்டின் பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் மக்களை பார்க்க வில்லை.

திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது வராத பிரதமர் வாரத்திற்கு ஒருமுறை வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் பேசத்தெரியவில்லை என பிரதமர் வருத்தப்படுகிறார். நம்மை ஹிந்தி படியுங்கள் என்கிறார்கள், அவர்கள் தமிழ் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் தமிழக முதலமைச்சர் கட்டாயம் ஒரு தமிழாசிரியரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பிஞ்சு போன செருப்பு என அண்ணாமலை சொல்லி வருகிறார். ஆனால் மறுபுறம் தமிழ் தொண்மையான மொழி என மக்களை ஏமாற்றி வருகிறார் பிரதமர்.

ஊழல் செய்வதற்கு சட்டம் போட்ட ஆட்சி உலகில் எங்கேயுமே கிடையாது. ஆனால் இந்தியாவில் பிஜேபி செய்துள்ளது. தேர்தல் பத்திரம் என்ற முறையை பாஜக செய்துள்ளது. ஒரு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து இந்த நிறுவனத்தின் மூலமே பாஜக தேர்தல் பத்திரத்தை பெற்று வழக்கை மீண்டும் கைவிட்டது. அரசியலில் தனக்கு எதிராக யாராக இருந்தாலும் அமலாக்க துறை மூலம் மத்திய அரசு சோதனை நடத்துகிறது.

அமலாக்கத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை போன்ற கஷ்டத்தை அனுபவிக்க முடியவில்லை என்றால் பாஜகவில் போய் சேர்ந்த உடன் அவர்களது வாசிங் மிசினில் சுத்தம் செய்யப்பட்டு தூய்மையானவராக மாற்றிவிடுவார்கள்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சியாக நாட்டில் பாஜக மட்டுமே உள்ளது. திமுகவை ஒழிப்பேன் என பிரதமர் சொல்லிவருகிறார். தேர்தலுக்கு பின் பாஜகவின் நிலையும் அதுதான். இந்தியாவிற்கு சொந்தமான இடத்தில் சீன கிராமங்கள் ஊடுருவிட்டது. ஆனால் அதற்கு பதில் சொல்லாமல் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது பேசாது கட்சதீவை பற்றி பிரதமர் பேசிவருகிறார். அரசியல் ஆதாயத்திற்காக காஷ்மீரில் ராணுவ வீர்ர்கள் வெடிகுண்டு தாக்குகலில் கொள்ளபட்டவர்கள் என்றால் இதனை விட கேவலமான செயல் எதுவும் கிடையாது.

எந்த தேர்தல் வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நாட்டில் அனைத்து பொருட்களின் விலையையும் உயர்ந்து வருகிறது. விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என சாமான்ய மக்களுக்கு எதிரான ஆட்சியை மத்திய அரசு செய்து வருகிறது. பாஜகவின் ஆட்சி அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் தான். அனைத்து மதத்தினருக்கும் உறுதுணையாக இருப்பது இந்தியா கூட்டணி. தேர்தலுக்காக மக்களை பயன்படுத்துபவர்கள் நாங்கள் இல்லை.

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்கள் விமானத்தை கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு வங்கி கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கூறி வருகிறார். எதிர்க்கட்சிகளை ஒடுக்கக்கூடிய அத்தனை வேலைகளையும் அவர்கள் செய்கிறார்கள்.

பிரதமர் இங்கு வந்தபோது திமுகவை ஒழித்து விடுவேன் என கூறுகிறார் தேர்தல் முடிந்ததும் உங்கள் நிலை அதுதான் என்பதை மறந்து விடக்கூடாது. சீனா பகுதியில் 2000 கிலோமீட்டர் இந்திய பகுதியை ஆக்கிரமித்துள்ளது இடங்களுக்கு பெயர் சீன மொழியில் வைத்துள்ளார்கள்
இவர்தான் இந்தியாவை காப்பாற்றக்கூடிய மிகப் பெரிய வீரரா, பாதி நாட்டை தாரை வார்த்து கொடுத்து விட்டார். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கட்சத் தீவு குறித்து கேள்வி எழுப்புகிறார்.

பத்தாண்டுகளாக எவ்வித அக்கறையும் கொண்டு செயல்படவில்லை. கேஸ் விலை 1100 ரூபாயாக இருக்கிறது பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி கொண்டு வந்து சின்ன சின்ன கடைக்காரர்களை வியாபாரிகளை நசித்து வருகிறார்கள். முதலமைச்சர் உறுதி அளித்த படி கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு வழங்கப்படும். பெட்ரோல் விலை 75 ரூபாய் டீசல் விலை 65 ரூபாய்க்கும் கொண்டு வரப்படும். திருநெல்வேலி நகர் பகுதிக்குள் மின் கம்பிகள் தரைக்கு கீழ் கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது

இந்துக்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாக இருப்பது இந்தியா கூட்டணி எனவே கைசின்னத்திற்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய