சென்னை:
என்.எல்.சிக்கு நிலம் எடுக்கும் விவகாரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொய்சொல்வதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு சுரங்கங்கள் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி பறித்திருக்கும் நிலையில், தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும், இனி நிலங்களை கையகப்படுத்தப்போவதில்லை என்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
இது அப்பட்டமான பொய்யாகும். என்.எல்.சிக்கு நிலம் எடுக்க கடலூர் மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ள முடியாத மாவட்ட நிர்வாகம், அனைத்து நடவடிக்கைகளையும் திரைமறைவில் செய்து வருகிறது. 1956-ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை 37,256 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை என்.எல்.சி பறித்துள்ளது. அந்த நிலங்களை வழங்கிய மக்களுக்கு இன்று வரை உரிய இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை.
அண்மையில் 299 பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. இப்போது அமைச்சரால் வழங்கப்பட்ட பணி ஆணை என்பது தினக்கூலி பணிக்கானது மட்டுமே. அடுத்த 3 மாதங்களில் ஒப்பந்தக்காரர்கள் நினைத்தால், இவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். இப்படிப்பட்ட ஒன்றுக்கும் உதவாத ஆணையை வழங்கித்தான் மக்களை அமைச்சர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
கடலூர் மாவட்டத்தை பாழ்படுத்தி வரும் என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் அவர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த இலக்குகளை எட்டும் வரை பா.ம.க. எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு