வியட்நாம் அதிபர் வோ வான் துவாங் பதவி ஏற்று ஒரே ஆண்டில் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வியட்நாம் நாட்டின் அதிபராக 54 வயதான வோ வான் துவாங், பதவியேற்றார். கொரோனா கால கட்டத்தில் அவருக்கு முன்பு பதவியில் இருந்த குயென் சுவான் புக்,மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் ரீதியாகப் பொறுப்பேற்று பதவி விலகினார்.
சுமார் 2 மாதங்களுக்கு பிறகு வோ வான் துவாங் வியட்நாம் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். வியட்நாம் நாட்டில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வோ வான் துவாங் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. தனது சொந்த காரணங்களுக்காக அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார் என அந்நாட்டின் அரசு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.