சிந்தனைத்திறன்
ஆனால், மனிதனுடைய சிந்தனைத்திறன் அவனை மற்ற விலங்குகளிடமிருந்து பிரித்துக்காட்டுகின்றது. சிறிய மனிதன் பெரிய யானையை அடக்கி ஆள்கிறான். கொடிய சிங்கம், புலி, கரடி போன்றவை இவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு அடங்கி ஒடுங்குகின்றன. இவன் சொல்லுகின்றபடியெல்லாம் ஆடுவதை நாம் சர்க்கசில் காணுகின்றோம். உயிரினங்கள் அனைத்தும் இவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிகின்ற. அகில உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களையும் இவன் அடக்கி ஆள்கின்றான். மனித இனத்தை எதிர்த்து மேற்கொள்ளக்கூடிய உயிரினம் எதுவுமே இல்லை. இவனே உருவத்தால் மற்ற உயிரினங்கள் எல்லாவற்றையும் விடப் பெரியவன் அல்லன். இது எவ்வாறு நடைபெறுகிறது? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. இந்த கேள்வி உள்ளத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. உடலின் ஆற்றல் என்பது வேறு; உள்ளத்தின் ஆற்றல் என்பது வேறு. உடலின் ஆற்றலோடு ஒப்பிடுகையில் இவனைவிட மற்ற உயிரினங்கள் வெற்றியடையக் கூடியனவாக இருக்கின்றான். இதுவே உலக நடை முறையாகவும் இருக்கின்றது. அப்படியானால் மற்ற உயிரினங்களுக்கு இல்லாத உள்ளத்தின் ஆற்றல் இவனுக்கு எங்கிருந்து வருகின்றது? உள்ளம் என்றால் என்ன? அந்த உள்ளம் மனிதனுக்கு மட்டுமே சிறப்பு ஆற்றலாக விளங்குவது எவ்வாறு? உடலையும், உயிரையும் தாண்டி மூன்றாவது பொருளாக உள்ளம் விளங்குவது எவ்வாறு? உள்ளம் என்பது ஓர் உறுப்பா? அது உள்ளே இருக்கும் உறுப்பா? இவனுக்கு மட்டுமே உரியச் சிறந்த உறுப்பா? என்னும் கேள்விகள் எழுகின்றன.
உள்ளம் என்பது பற்றி நாளை தொடர் பதிவில் பார்ப்போம்.