கள்ளக்காதல் விவகாரத்தில் தான் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தாலும் இந்த அளவிற்கு படுகொலை செய்யும் ஆத்திரம் வரும் வருவதற்கு காரணம் தன் கண் முன்னேயே தன் மனைவியுடன் நகை கடை உரிமையாளர் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்து விட்டதால்தான் ஆத்திரப்பட்ட ஏட்டு கூலிப்படையை ஏவி இருக்கிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மதுரையில் வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன். 44 வயதான இந்த வாலிபர் ஜெய்ஹிந்த்புரத்தில் நகை கடை நடத்தி வந்துள்ளார். இந்து மக்கள் கட்சியில் மதுரை தென் மாவட்டத் துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மணிகண்டன் இரவில் கடையினை பூட்டிவிட்டு வீடு திரும்பிய போது வழியில் மர்ம கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியிருக்கிறது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கள்ளக்காதல் விவகாரத்தால் கூலிப்படை ஏவி மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது.
இந்த படுகொலை தொடர்பாக ஏட்டு ஹரிகர பாபு கூலிப்படையைச் சேர்ந்த ஏழு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஹரிஹரபாபுவிடம் நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மணிகண்டனின் நகைக்கடைக்கு ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஏட்டு ஹரிஹர பாபு தன் மனைவியுடன் சில மாதங்களுக்கு முன்பு சென்றிருக்கிறார். நகை வாங்கிய போது மணிகண்டனுக்கும் ஹரிஹர பாபு மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இந்த பழக்கம் கள்ள உறவாக மாறி இருக்கிறது. ஏட்டு வேலைக்குச் செல்லும் நேரத்தில் எல்லாம் அவரது வீட்டிற்கு வந்து அவரது மனைவியுடன் உல்லாசமாக இருந்து விட்டு சென்றிருக்கிறார் மணிகண்டன்.
ஒருநாள் திடீரென்று ஏட்டு ஹரிஹர பாபு வீடு திரும்பிய போது, தன் மனைவியுடன் மணிகண்டன் தனிமையில் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்திருக்கிறார். தன் கண் முன்னேயே தன் மனைவியுடன் வேறு ஒரு நபர் உல்லாசமாக இருப்பதை பார்த்த ஏட்டுக்கு கடும் மாத்திரம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தான் மணிகண்டனை எப்படியும் கொன்று விட வேண்டும் என்று அவர் கூலிப்படையை ஏறி இருக்கிறார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.