சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வியாசர்பாடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாள பாதையில் மழை நீர் தேங்கியது. வியாசர்பாடி, பேசின் பாலம் இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரெயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரூ செல்லும் ரெயில் ஆவடியில் இருந்து இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுகிறது. ரெயில் சேவை பாதித்துள்ளதால் வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடிந்த பிறகே சென்ட்ரலில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தனது செய்தி குறிப்பில் அறிவித்துள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு