பெங்களூரு:
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர்.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13இல் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை மீண்டும் பெரும்பான்மை இடங்களை கைப்பெற்றி ஆட்சி கட்டிலில் அமர தீவிர முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
அதேபோல் முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பாவை முக்கிய முகமாக பாஜக மேலிடம் முன்னிறுத்தி இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. தமிழ்நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலையும் மாநில தேர்தல் பொறுப்பாளராக உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா என மூத்த தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். எதிர்கட்சியான காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மாநில பாஜக அரசு மீது அதிருப்தி இருப்பதால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட மாநில தலைவர்களும், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் தீவிர யுக்திகளை வகுத்து வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கர்நாடாகாவில் இன்று எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். பெங்களூருவில் புகழேந்தி தலைமையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு தங்களின் ஆதரவை பாஜகவுக்கு வழங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதாரவாளர்கள் கர்நாடகா பாஜகவை சந்தித்து ஆதரவு தருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே கூட்டணி தொடர்பாக மாநில பாஜக மற்றும் எடப்பாடி தரப்பு இடையே குழப்பமான சூழல் நிலவிவரும் சூழலில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தற்போது எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். இதற்கு முந்தைய தேர்தலில் கர்நாடகாவில் உள்ள சில தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு