விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக் பொது செயலாளர் ஆர். வெங்கடேசன் அவர்கள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
விடியா தி மு க ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக தொடர் கொலை கொள்ளை வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் காவல் துறையினர் மெத்தனப் போக்கோடு இருக்காமல் இந்த படுகொலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கிட வேண்டும்.
கழகத்தின் மீதும் பொது தலைமையின் மீதும் தொடர்ந்து விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்பு சகோதரர் வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்த்த இரங்கலையும் அநுதாபங்களையும் தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என்று கழக பொது செயலாளர், சட்டமன்ற எதிர் கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டார்.
