புதுப்பட்டினம்:
புதுப்பட்டினம் பாவலரேறு தமிழ்வழி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், இதயநோய் (மாரடைப்பு) வருவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு வெளியிட்டது நடுவண் அரசு. அதில் பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளாமை காரணமாக 98.4 விழுக்காடு மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப் பூர்வமாக மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார் . காய்கறிகள், பழங்கள் உண்ணும் பழக்கம் பெருமளவு குறைந்து வருவதாலே மாரடைப்பு பெருமளவு அதிகரித்ததற்கு காரணம் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதை கருத்தில் கொண்டு புதுப்பட்டினம் பாவலரேறு தமிழ்வழி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் துரித உணவுகளை தடைசெய்யப்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை கொண்டு வரச்சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினோம். இடைவெளி நேரத்தில் (நொறுக்குத் தீனி ) பழங்கள், சிறுதானியம் கொண்டு வந்தவர்களை நிற்க வைத்து கைதட்டுவோம். உணவு உண்ணும் போது காய்கறிகள், கீரைகள் கொண்டு வந்தவர்களை நிற்க வைத்து கைதட்டி பாராட்டுவோம் .
கைதட்டல் வாங்க வேண்டும் என்பதற்காகவே எம்பள்ளி மாணவர்கள் நாள்தோறும் பழங்கள், சிறுதானியங்கள் , காய்கறிகள் , கீரைகள் கொண்டு வருகிறார்கள். இத்தகைய நடைமுறை இந்தியாவில் வேறு எந்தப் பள்ளிகளிலும் இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . அந்த வகையில் (இயற்கை உணவுகள் உண்பதில்) இந்தியாவுக்கே முன்மாதிரிப் பள்ளியாக இருக்கிறது புதுப்பட்டினம் பாவலரேறு தமிழ்வழிப் பள்ளி.
“நம் மண்ணில் விளையும் காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்கள் , பழங்களை மட்டும் உண்போம்!
மாரடைப்பை இம்மண்ணுலகை விட்டே விரட்டுவோம்!”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு