தூத்துக்குடி:
இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களால் நினைவுகூறப்படும் ஒரு நிகழ்வே குறுத்தோலை பவனியாகும்.
இயேசு கிறிஸ்து துன்பத்துக்கு ஆளாகி இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன் எருசலேம் நகருக்குள் நுழைந்தார். அப்போது அவர் ஒரு கழுதையின் மீது ஏறி அமர்ந்து வந்தார். அப்போது வழியெங்கும் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு கைகளில் பேரீச்சை மரத்தின் குருத்துகள், ஒலிவ மரத்தின் கிளைகள் மற்றும் லில்லி மலர்களை ஏந்தியபடி இயேசுவை முன்னால் போகச் செய்து மக்கள் அணிவகுத்துச் சென்றார்கள்.
அதை நினைவுகூறும் வகையில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடியில் இன்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. லூர்தம்மாள்புரம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அருள்தந்தை பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவம் கேபி முன்பு இருந்து. பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர் முன்னிலையில், குருத்தோலை கையில் பிடித்தவாறு பவனியாக ஆலயத்துக்கு வந்தனர். பின்னர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
இதைப்போல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம் ஆலயம், அந்தோணியார் கோவில் ஆலயம், ஸ்டேட் பேங்க் காலனி வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு